திறைசேரிப் பிணைமுறி விவகாரம் – சர்ச்சைக்குரிய வர்த்தமானி வெளியிடப்பட்டது என அரச அச்சகர் ஒப்புதல்…

திறைசேரிப் பிணைமுறி விவகாரம் தொடர்பிலான சர்ச்சைக்குரிய வர்த்தமானி, பொது கடன் திணைக்களத்தினால், டிசெம்பர் 22ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டதாக அரச அச்சகக்கூட்டுத்தாபனத்தின் அச்சகர் தெரிவித்துள்ளார்.

திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் பகிரங்க அமர்வின் போதே அரச அச்சகர் மேற்கண்டவாறு சாட்சியமளித்துள்ளார்.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியன்று வெளியிடப்பட்டதாக கூறப்படும், திறைசேரிப் பிணைமுறி விவகாரம் தொடர்பிலான சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்று திறைச்சேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.