திலக் மாரபன்ன திடீர் இராஜினாமா (Update)

திலக் மாரபன்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு. குறித்த இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

(2ம் இணைப்பு)

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரபன்ன தனது அமைச்சு பதவியிலிருந்து விலகுவதற்கான சாத்தியகூறுகள் பெரும்பாலும் காணப்படுவதாக அமைச்சரின் நெருங்கிய தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம், இன்று முற்பகல் வேளையில் அமைச்சரின் வீட்டில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது இராஜினாமா தொடர்பான அறிவிப்பை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் அறிவிப்பார் என அவரது நெருங்கிய தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைச்சர் திலக் மாரபன்ன அண்மையில்  வெளியிட்ட கருத்தை அடுத்து, அமைச்சர் திலக் மாரபன்ன பதவி விலக்க நடவடிக்கை வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகத்து வந்தன.

இதன் பின்னணியிலேயே இன்றைய தினம் அமைச்சர் தனது இராஜினாமா தொடர்பான அறிவிப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அவரது நெருங்கிய தரப்பினர் குறிப்பிட்டனர்.