திலங்க, அர்ஜூன, நிஷாந்த ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி

பிரதித் தலைவர் திலங்க சுமதிபால, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, நிஷாந்த ரணதுங்க ஆகியோருக்கு இம்முறை இலங்கை கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தலுக்கு கிடைத்த அனைத்து வேட்பு மனுக்களும் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட மூவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்விதத் தடையும் இல்லையென விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்தார்.

திலங்க சுமதிபால, நிஷாங்க ரணதுங்க ஆகியோர் இம்முறை தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். அவர்களுடன் சுமித் பெரேராவும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உப தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.