திலானின் கட்டளை மற்றும் சந்திமால் குறித்து திமுத்திடம் இருந்து கருத்து…

அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் ஆட்டமிழந்த நிலையில், தனக்கு ஆட்டமிழக்காது விளையாடுமாறு பயிற்சியாளர் திலான் சமரவீர தெரிவித்திருந்ததாக இலங்கை அணிக்காக ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட திமுத் கருணாரத்ன நேற்று(12) தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியின் பின்னரான ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும், கருத்துத் தெரிவித்த திமுத்;

“இந்த இன்னிங்க்ஸ் ஆனது எனது வாழ்வில் பெற்றுக்கொண்ட மூன்று சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். உலகிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எனது திட்டத்தினை நானே வகுத்துக் கொண்டேன். என்றாலும், முதல் பதினொரு ஓவரும் இலகுவாக அமையவில்லை.. எனக்கு திலான் அண்ணா கூறியதெல்லாம் அனைவரும் ஆட்டமிழந்து விட்டனர் எப்படியாவது ஆட்டமிழக்காது தொடர்ந்தும் விளையாட வேண்டும்..” என தெரிவித்திருந்தார்.

சந்திமால் இல்லையென்றாலும் அணியின் மனநிலை திடமாக இருந்ததாகவும், காலி சர்வதேச மைதானத்தின் ஆடுகளமும் வித்தியாசமாக இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.