கொழும்பு, புதுக்கடை முன்னாள் நீதவான் திலின கமகேவை, பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு, புதுக்கடை முன்னாள் நீதவான் திலின கமகே, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இன்று வருகை தந்தார்.
யானைக் குட்டியை சட்ட விரோதமான முறையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது