தில்ருக்க்ஷி டயஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு..

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இலஞ்ச உழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணைகளுக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றதை தான் மிகவும் அருவருப்புடனும், மோசமாகவும் கண்டிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தே இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் பதவி விலக காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போழுது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் யாருமே நாட்டில் இல்லை என்பதும் குறுப்பிடத்தக்கது.