திவிநெகும பரீட்சையில் சிக்கல் நிலை..

நாளை(18) இடம்பெறவிருந்த திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் 3 ஆம் தர உத்தியோகஸ்ர்களுக்கான போட்டிப்பரீட்சையை நடாத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கா, திணைக்களத்தின் இயக்குனர் நாயகம், பயிற்சிகளை நடாத்தும் தரப்பினர் ஆகியோருக்கு இடையே இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த பரீட்சைக்காக சுமார் இரண்டு லட்சம் பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 90 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படாதவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.