திஸ்ஸமஹாராம – எல்லகல பகுதியில் நேற்றிரவு(03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் எல்லகல பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞனே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர்கள் அடையாங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.