திஸ்ஸ அத்தநாயக்கவினை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, போலி ஆவணங்களை வெளியிட்டமை, உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபரால் கடந்த 9ம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.