ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசார வேளையின் போது, பொது எதிர்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மைத்தரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாக கூறி, போலியான கையொப்பம் ஒன்றை பயன்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு இன்று(19) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.