தீபாவளிக்கு வெளியாகவுள்ள படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படத்தை சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஒரு இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த படம் எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு 25 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.