தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ உள்பட 5 புதிய படங்கள் வெளியாகின்றன.
பண்டிகை நாட்களில் பெரிய பட்ஜெட் படங்களையும் மற்ற நாட்களில் சிறு பட்ஜெட் படங்களையும் திரைக்கு கொண்டுவரும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் பட அதிபர்களிடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற அக்டோபர் மாதம் 18-ந் திகதி `மெர்சல்’, `குலேபகாவலி’, `நெஞ்சில் துணிவிருந்தால்’, `சொல்லி விடவா’, `ஹரஹர மகாதேவகி’ ஆகிய 5 படங்களை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
5 படங்களுக்கும் தியேட்டர்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டன.
இதில் ‘மெர்சல்’ படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக வருகிறார்கள். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். என்.ராமசாமி, ஹேமா ருக்மணி தயாரித்துள்ளனர்.
அதேபோல் `குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவா – ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். கல்யாண் இயக்கியுள்ளார்.
‘சொல்லிவிடவா’ படத்தை நடிகர் அர்ஜுன் இயக்கத்துடன் அவருடைய மகள் ஐஸ்வர்யா கதாநாயகியாகவும், கன்னட நடிகர் சந்தன்குமார் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.
`நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் விக்ராந்த், சந்தீப் கிஷன், மெஹ்ரின் பிர்சாதா ஆகியோர் நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கி உள்ளார்.
`ஹரஹர மகாதேவகி’ படத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளனர். சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி உள்ளார். காதல், நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது.