மத்திய மகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை(28) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண கல்வியமைச்சு இன்று(27) அறிவித்துள்ளது.
தீபாவளி திருநாளை முன்னிட்டு குறித்த இந்த விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடுமுறை வழங்கப்படும் நாளுக்கான கல்வி நடவடிக்கைகள் பிறிதொரு நாளில் நடைபெறும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.