இந்தி நடிகர் ரன்வீர்சிங், தீபிகா படுகோனே நடித்து வரும் ‘பத்மாவதி’ படத்தில் ஒரு காட்சியில் தீபிகாவிடம், ரன்வீர் 25 முறை கன்னத்தில் அறை வாங்கியிருக்கிறார்.
இந்தி நடிகர் ரன்வீர்சிங், தீபிகா படுகோனே 3-வது முறையாக இணைந்துள்ள படம் ‘பத்மாவதி’. சரித்திர பின்னணியில் உருவாகும் இந்த படத்தை சஞ்சைலீலா பன்சாலி இயக்குகிறார்.
சரித்திர பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ராணி பத்மாவதியாக தீபிகா நடிக்கிறார். அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் நடிக்கிறார். இவர்களுடன் ரசாமுராத், ஷாகித்கபூர் உள்பட பலர் நடிக்கிறார்கள். கதைப்படி ரசாமுராத் ஒரு காட்சியில் ரன்வீர்சிங்கை கன்னத்தில் அறைய வேண்டும். இந்த காட்சி துல்லியமாக அமைய வேண்டும் என்று இயக்குனர் சஞ்சைலீலா பன்சாலி விரும்பினார். ஆனால் எதிர்பார்த்தபடி ‘டேக்’ அமையவில்லை. இதனால் ரன்வீர் கன்னத்தில் ரசாவை மீண்டும் மீண்டும் அறையச்சொல்லி இயக்குனர் படமாக்கினார்.
இப்படி 24 ‘டேக்’குகளில் ரன்வீர் கன்னத்தில் அறை வாங்கினார். கடைசியாக 25-வது ‘டேக்’கில்தான் இயக்குனருக்கு திருப்தி ஏற்பட்டது. இந்த காட்சியை எடுத்து முடிப்பதற்குள் திரும்பத் திரும்ப அறை வாங்கியதால் ரன்வீர்சிங் கன்னம் சிவந்து விட்டது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உண்மை கதை என்று தெரிவித்து இருக்கிறார்.