தீபிகா படுகோனுடன் ஒன்று சேர்ந்து கனவை நனவாக்குவாரா கெய்ல்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற வேண்டும் என்று விரும்புவதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரரான கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடும் கெய்லின் அதிரடி ஆட்டமே பலரையும் ரசிகர்களாக்கி வைத்திருக்கிறது.

இந்தியாவில் தமிழகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பிராவோ, கெய்ல் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சென்னை வேலம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கெய்ல் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டனர்.

கேள்வி : எதிர்காலத்தில் நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவீர்களா?

பதில் : ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இடம்பெறும்போது நான் டோனியிடம் பேசுவேன் என்றார்.

கேள்வி : நீங்கள் ஆட்டோகிராப் வாங்க விரும்பும் பிரபலம் யார்?

பதில் : யாருங்க இப்ப ஆட்டோகிராப் வாங்குறாங்க… தீபிகா படுகோனேவுடன் செல்பி எடுக்கத்தான் எனக்கு ஆசை என்று கெய்ல் தெரிவித்தார்.

gayle-in-chennai

gayle-in-chennai01

gayle-in-chennai02

gayle-in-chennai03