பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் திகதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 திகதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்’ என தீபிகா படுகோனே குறிப்பிட்டுள்ளார்.
