தீபிகா வீட்டு வாடகை இவ்வளவா?

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபிகா படுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள பீனாமண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு எடுத்துள்ளனர்

அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 லட்சம் ருபாய். முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் 7.25 லட்சம் ரூபாயும், அடுத்த ஒரு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாயும் மாத வாடகையாக தரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.