(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
தன்னை குற்றவாளியாக அறிவித்தும் தண்டனை விதித்தும் கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு எதிராக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன் முறையீடு செய்துள்ளார்.
மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மேன் முறையீடு ஆவணம், இன்று (07) சட்டத்தரணி மேரி டிக்மன் ஊடாக மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண முதலமைச்சராக இருந்தபோது, காணி ஒன்று தொடர்பில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி உறுதி மொழிக் குறிப்பை கையெழுத்திட்டுக் கொண்டமை தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு இரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நேற்று ( 6)தீர்ப்பளித்ததுடன் அத்தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.