எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த கலந்துரையாடல் தொடர்பான திகதியை அறிவிப்பார் என குறித்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தை கூட்டுவது சிறந்ததென பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமையவே இன்று(30) கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma