தீவிரவாதக் கண்காணிப்பு விமானங்களை வேட்டையாட அமெரிக்காவிடமிருந்து கழுகுப் படை

கிரிமினல்களையும், தீவிரவாதிகளையும் கண்காணிக்க பல்வேறு நாட்டு அரசுகள் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பயன்படுத்திவரும் நிலையில் இதே தொழில்நுட்பத்தை போதைப் பொருள் கடத்தலுக்கும், கொள்ளையடிப்பதற்கு வேவு பார்க்கவும் பிரபல கிரிமினல்களில் சிலர் தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிரிமினல்கள் சட்டவிரோதமாக பறக்கவிடும் ஆளில்லா வேவு விமானங்களை வேட்டையாடுவதற்கு தேர்ச்சிபெற்ற கழுகுக் கூட்டங்களை வானில் களமிறக்குவது தொடர்பாக அமெரிக்க பொலிசார் ஆலோசித்து வருகின்றனர். ஏற்கனவே, இந்த திட்டம் ஹாலந்து நாட்டில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள நிலையில் கம்பீரமான கழுகின் உருவத்தை அரசு முத்திரையில் பயன்படுத்திவரும் அமெரிக்காவும் இந்த கழுகுப்படையை உருவாக்க தீர்மானித்துள்ளது.

வானத்தின் அரசனாக வர்ணிக்கப்படும் கழுகுகள் படுவேகமாக பறந்து பாய்ந்து மிகுந்த பலத்துடன் தனது இரையை வானில் தாக்கிக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றின் சக்திக்கு நிகரான பறவை வேறெதுவும் இல்லை. எனவே, அவற்றுக்கு உரிய பயிற்சி அளித்து கிரிமினல்களின் கண்காணிப்பு விமானங்களை வேட்டையாடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானங்களை கழுகு வேட்டையாடும் காட்சியை வீடியோவாக பார்க்க.

[youtube url=”https://www.youtube.com/watch?v=HifO-ebmE1s” width=”560″ height=”315″]