தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மதவாச்சிய – இகிரிகொல்லேவ பகுதியில் வைத்து ஒருவர் கைது..

(FASTNEWS | COLOMBO) – சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த 47 வயதுடைய மொஹமட் ஷாபிர், மதவாச்சிய – இகிரிகொல்லேவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதவாச்சிய காவற்துறைக்கு மற்றும் காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று(28) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.