துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணிவதால் பயன் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாதாரண துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணிவதால் கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள் சாதாரண துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கி உள்ளனர்.

மருத்துவ ரீதியாக தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை ஒரு சிலரே அணிவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், சாதாரண துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணிவதால் கொரோனா வைரசை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

சமூக இடைவெளி பின்பற்றப்படாத இடங்களில் சாதாரண துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் அணிவதால் பலனை தராது.

சமூக இடைவெளி சரியாக பின்பற்றப்படும் இடங்கள், வாகனங்களில் பயணம் செய்வது போன்ற நேரங்களில் துணிகளால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை அணியலாம்.

மேலும் இருதய நோய், நுரையீரல் நோய், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளானவர்கள் கண்டிப்பாக மருத்துவ ரீதியான முகக்கவசம் தான் அணிய வேண்டும். அதேபோல 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் கட்டாயம் மருத்துவ ரீதியிலான முகக்கவசத்தை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவது, சமூக விலகலை கண்டிப்பாக பின்பற்றுவது போன்றவை நல்ல பலனை கொடுக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.