துணைத் தலைமை சஜித் இடமிருந்து ராஜிதவுக்கு.. – சஜித் கடும் எதிப்பு…

ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைமைப் பதவியினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்குமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, கட்சியினுள் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு குழுவிலேயே குறித்த இந்த யோசனையினை அமைச்சர் சாகல ரத்நாயக்க முன்வைத்துள்ளார்.

குறித்த யோசனை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் பெரிதும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.