துணை மருத்துவ சேவைப் பணியாளர்கள் இன்று முதல் போராட்டத்தில்…

துணை மருத்துவ சேவையுடன் தொடர்புடைய எட்டு தொழிற்சங்கங்கள் இன்று(16) காலை 8 மணி முதல் 48 மணி நேர போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.

இதன் காரணமாக அரச வைத்தியசாலைகளில் இடம்பெறவிருந்த பல இருதய சத்திர சிகிச்சைகள் பாதிப்படையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறையில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தே குறித்த இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.