(FASTNEWS | COLOMBO) – துனிசியாவின், டியூனிஸ் தலைநகருக்கு ஐஎஸ் அமைப்பினால் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த தாக்குதலில் தற்கொலை குண்டுகள் இரண்டு செயற்பட்டுள்ளதாகவும், இதில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒரு பொலிஸார் மற்றும் மூன்று பொதுமக்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே குறித்த தாக்குதலினால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள டியூனிசியாவின், 92 வயதுடைய ஜனாதிபதி செய்த் எசெப்ஸ் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டின் அரபு வசந்த காலத்தில் ஜனநாயக ரீதியாக உருவான ஒரே நாடு துனிசியா என்பதும் குறிப்பிடத்தக்கது.