துபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – துபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பேருந்து வீதியொன்றில் மேற்புறம் இருந்த பெயர்ப்பலகையில் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது பேருந்தில் வௌிநாட்டவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதுடன், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்று வௌியாகியுள்ளன.