துபாயில் கைது செய்யப்பட்ட உதயங்க’வை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை…

துபாயில் நேற்று(04) கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் வழியில், மாற்று விமானத்துக்காக காத்திருந்த போது, துபாய் விமான நிலையத்தில் உதயங்க வீரதுங்க நேற்றுக் காலை துபாய் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் துபாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டு,பின்னர் அவரை அனைத்துலக காவல்துறையினர் பொறுப்பேற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரேனிடம் இருந்து, 04 மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக, உதயங்க வீரதுங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவரைக் கைது செய்வதற்கு 2016 ஒக்ரோபர் மாதம், கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றம், அனைத்துலக காவல்துறைக்கான பிடியாணையை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எயனும், துபாயில் கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு, இராஜதந்திர மற்றும் சட்ட காரணங்களால் குறிப்பிட்ட காலம் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma…