(FASTNEWS | COLOMBO) – பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் இனது அழைப்பின் பேரில் அவரது விருந்துக்கு தான் தாம் செல்கிறோம் என துபாய் செல்ல முன்னர் தான் அறிந்திருந்ததாக கடந்த பெப்ரவரி மாதம் 05ம் திகதி துபாயில் கைதாகிய நதீமல் பெரேரா இரகசிய பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
எனது தந்தையான பாடகர் அமல் பெரேரா அது தொடர்பில் என்னை அறிவுறுத்தி இருந்ததாகவும் நதிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு வருவதற்கு நதிமல் பெரேராவுக்கு விமான டிக்கெட்டுக்கள் பெற்றுக் கொடுத்துள்ளதும் மாகந்துரே மதூஷ் இனது சட்ட ரீதியற்ற மனைவி எனவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
நேற்றைய(27) தினம் நதிமல் பெரேரா இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.