நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை தொடர்பில் சிறைவைக்கப்பட்டுள்ள முஹம்மத் நியாஸ் நௌபர் எனப்படும் ‘பொட்ட நௌபர்’ திடீர் சுகயீனம் காரணமாக இன்று(16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக தொற்று நிலை குறித்தே அவர் கண்டி போதனா வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிகளுடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த காணொளி..