துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்..

கிரிபாவ, வராவெவ பிரதேசத்தில் குறுக்கு வீதி ஒன்றில் மோட்டார் வாகனத்தில் வந்த குழுவொன்று மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 34 வயதுடைய வராவெவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடையே பணம் சம்பந்தமாக காணப்பட்ட பிரச்சினையே குறித்த இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கிரிபாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

(rizmira)