சியம்பலாவெவ வனப்பகுதியில் இன்று(12) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காட்டுப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மரம் வெட்டிக் கொண்டிருந்த இருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் சியம்பலாவெவ, கருவலகஸ்வெவ பகுதிகளைச் சேர்ந்த 18 மற்றும் 31 வயதுடைய நபர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(rizmira)