துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி – காவலர் கைது.

வெலிவேரி – இம்புல்கொட பிரதேசத்தில் தேங்காய் தோட்டம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு(27) இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 46 வயதான அதே பிரதேசத்தை சேர்ந்த நபர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் திருட்டுதனமாக தேங்காய் பறிக்க தோட்டத்தில் புகுந்த போது, அங்கிருந்த காவலரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட 63 வயதான காவலரை காவற்துறை கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.