துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கிய விஜய்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு, நிதியுதவியும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Image result for vijay visit thoothukudi