துமிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – விதுர விக்ரமநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துமிந்த திசாநாயக பதவியேற்றதன் பின்னர் விவசாய அமைச்சில் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சினால் வாடகைக்காக பெறப்பட்ட கட்டிடங்கள் பயன்படுத்தாத நிலையில் அதற்காக வாடகைகள் செலுத்தப்பட்டு வருவதாகவும் விதுர விக்ரமநாயக குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.