முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவின் கைவிரல் அடையாளங்கள் மீளவும் பதிவு செய்யப்பட உள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிற்சங்கவாதியுமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கின் 11ம் பிரதிவாதியாக துமிந்த சில்வா பெயரிடப்பட்டுள்ளார்.
துமிந்த சில்வா உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்புடைய ஏழு பேரின் கைவிரல் அடையாளங்களை மீளவும் பதிவு செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்ற விசேட நீதவான் குழாம் நேற்று(21) உத்தரவிட்டுள்ளது.
குறித்த இந்த வழக்கினை மூவர் அடங்கிய நீதவான் குழாமொன்று விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும், சம்பவம் தொடா்பில் மேற்குறிப்பிட்ட சந்தேக நபர்கள் வழங்கிய கைவிரல் அடையாளங்கள் தெளிவற்ற நிலையில் காணப்பவதனால் அவற்றை மீள வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் துமிந்த சில்வா, அனுர துஸார டி மெல், சந்தன ஜகத் குமார, லங்கா ரசன்சன, விதானகே அமில, ரோஹன மாரசிங்க மற்றும் நாகொட லியனாரச்சி மற்றும் சாமிந்த ஆகியோரிடமிருந்து கைவிரல் அடையாளங்கள் பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸாருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.