இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 4.30 மணியளவில் திடீர் சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்ட இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலில், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துமிந்த சில்வா, கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.