(FASTNEWS | COLOMBO) – தும்மலசூரிய – யதம்வெல பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய சோதனையின் போது 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 08 பெற்றோல் குண்டுகள், மோட்டார் சைக்கிள் மற்றும் 5,60,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தும்மலசூரிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.