பங்களாதேஷுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் 194 ஓட்டங்களைப் பெற்று துரதிர்ஷ்டவசமாக 6 ஓட்டங்களால் இரட்டைச் சதத்தைத் தவறவிட்டார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இணங்கிய இலங்கை அதன் முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 494 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ், நேற்றைய நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.