தென்னாபிரிக்கா அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை லசித் மாலிங்க இழந்துள்ளார்.
அவரது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே குறித்த சந்தர்ப்பத்தினை இழக்க நேரிட்டுள்ளது.
இன்னும், மாலிங்க கடந்த மாதம் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்ததால் சரியான முறையில் பயிற்சிகளிலும் ஈடுபடத் தவறியிருந்தார். ஆதலால் குறித்த போட்டியிலிருந்து லசித் மாலிங்கவினை நீக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மாலிங்க அவுஸ்திரேலிய அணியுடனான மோதும் 3 போட்டிகளிலும் இருபதுக்கு இருபது போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், மாலிங்க இது குறித்து தெரிவிக்கையில்; “தென்னாபிரிக்க அணியுடனான இருபதுக்கு இருபது போட்டியில் விளையாட நான் தயாராகியே இருக்கிறேன்..” எனத் தெரிவித்துள்ளார்.
“தொடர்ந்து ஒருவருடம் ஓடாது இருந்து ஒருநாள் போட்டியில் ஆடுவது சிரமமான காரியம்… ஆதலால் நான் முதலில் T20 போட்டி இரண்டிலும் விளையாடி, இன்னும் அவுஸ்திரேலிய T20 போட்டிகள் இரண்டிலும் விளையாடி, ஜூன், ஜூலை எனத் தொடர்ந்தும் விளையாட எண்ணியுள்ளேன். எதிர்வரும் தென்னாபிரிக்க போட்டியிலும் விளையாட எண்ணியுள்ளேன்..” எனத் தெரிவித்துள்ளார்.