துருக்கியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இதுவரை 45பேர் பலி..

துருக்கியின் சிஸ்ரே பகுதியைச் சேர்ந்த பொலிஸ் தலைமையகத்திற்கு வெளியே இன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 8 பொலிஸ் அதிகாரிகள் பலியாகினர். 45க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து துருக்கி ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகளில் பொலிஸ் தலைமையகத்தின் அருகாமையில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்து, சில கட்டிடங்கள் இன்னும் தீப்பற்றி எரிவது போல் காணப்படுகிறது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சிஸ்ரே பகுதியை சேர்ந்த முக்கிய சாலைகளை மூடப்பட்டுள்ளன.

காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.