துருக்கி பாராளுமன்றத்திலும் நேற்று மோதலாம்

துருக்கிப் பாராளுமன்றத்திலும் நேற்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியினரிடையே மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவின் ஆர். ரி. தொலைக்காட்சி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

துருக்கியின் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் ஏற்பட்ட விவாதத்தின் போது வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

துருக்கி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அரசியலமைப்புத் திருத்தச் சட்டமொன்றுமுன்வைக்கப்பட்ட போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் நீதி அமைச்சர் பெர்கி பொஸ்டனுக்கு இந்த மோதலுக்கான பொறுப்பை ஏற்குமாறு துருக்கி ஆதரவு எதிர்க் கட்சி குற்றம் சாட்டியுள்ளதாக இன்றைய சிங்கள தேசிய நாளிதழொன்று முதற்பக்க செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை நாடாளுமன்றத்திலும் மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா விடுத்த அறிவித்தலின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடையே சண்டை ஏற்பட்டு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.