துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

பாலா இயக்கத்தில் துருவ் – மேகா நடிப்பில் உருவாகி இருக்கும் `வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் படம் ரிலீசாகாது என அறிக்கை வெளியிட்டுள்ளது.

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

பெப்ரவரி இரண்டாவது வாரத்தில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை கைவிடுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.