துர்க்மெனிஸ்தான் நாட்டில் கருப்பு நிற காரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோவியத்ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடு துர்க்மெனிஸ்தான். இதன் தலைநகரான அஸ்காபாத்தில் கருப்பு நிற கார்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி ஓட்டினால் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. காரின் நிறத்தை வெள்ளையாக மாற்றி விடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால்தான் கார்கள் திரும்ப ஒப்படைக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி முதலாம் திகதி புத்தாண்டு முதல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கார் நிறம் மாற்றத்துக்கு அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமே தோவ் காரணம் என கருதப்படுகிறது. இவருக்கு வெள்ளை நிறம் ராசியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவர் தனது வீடு, அலுவலகத்தை வெள்ளை நிற மார்பிளில் மாற்றி விட்டார். வெள்ளை குதிரைகளை வைத்துள்ளார். வெள்ளை ஆடைகளை அணிகிறார். வெள்ளை தரை விரிப்புகள், வெள்ளை பூக்கள் நிறைந்த ஜாடிகள் என எங்குமே வெள்ளை நிறமாக காட்சி அளிக்கிறது.
கார்களில் நிறம் மாற்ற வேண்டும் என்ற அரசின் உத்தரவால் வெள்ளை நிறப்பூச்சின் (paint) விலை பல மடங்கு உயர்தப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.