கொழும்பு துறைமுக நகரத் திட்ட ஒப்பந்தத்தினை சீன நிறுவனம் ஒன்றிற்கு கேள்விப்பத்திரம் இன்றி வழங்கி, அதற்கு கைமாறாக 200 இலட்சம் பணத்தினை முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது மனைவியின் ஊடாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார ஜயமஹ குற்றம் சட்டுகின்றார்.
‘ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் நான்காம் கட்ட நடவடிக்கை’ என்ற தொனியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த மோசடி குறித்து அம்பலப்படுத்தினார்.
குறித்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்..
‘கொழும்பு கோட்டை துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷ நிதியத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்கள் அதவாது சுமார் 200 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது.
பொழும்பு துறைமுக நகரத்திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் பணிகளை மேற்கொள்ளும் colombo international container terminal நிறுவும் குறித்த ஒப்பந்தத்தைத் தமக்கு பெற்றுக் கொடுத்தமைக்கு கைமாறாக இந்த தொகையினை வழங்கியுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளதுடன், அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ தான் விரும்பிய நிறுவனங்களுக்கு கேள்விப்பத்திரங்கள் இல்லாமல் ஒப்பந்தங்களை வழங்கி, இவ்வாறு வேறு நபர்களின் ஊடாக இலஞ்சமாக பணத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாகவே இவ்வாறு தனது மனையின் பெயரில் அமைந்துள்ள நிதியத்தின் ஊடாக இவ்வாறு பணத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.’ என்றும் கூறினார்.