ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலின் முன்னால் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் இதுவரையில் மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர்கள் மயக்கமுற்ற நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெண்ணொருவரும் இரண்டு ஆண்களும் உள்ளடங்குவர்.
அவர்களின் நிலமை பாரதூரமாக இல்லை எனவும், அவர்கள் தங்கியிருந்து கிசிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தங்களை இலங்கை துறைமுக அதிகார சபையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, மாகம்புர துறைமுகத்தில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் சிலர் துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் தொடர்ந்தும் மூன்றாவது நாளாகவும் இன்றும்(11) உண்ணாவிரத போராட்டம் தொடர்வதோடு, தீர்வின்றி போராட்டத்தினை கைவிட மாட்டோம் என மாகாம்புர துறைமுக சேவையாளர்களின் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக பிரசாத் தெரிவித்தார்.
#reeshma