தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறப்பு..

நிலவும் மழையுடனான காலநிலையுடன் தெதுரு ஓயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் தொதுரு ஓயாவிற்கு அருகில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்பாசன திணைக்களம் கோரியுள்ளது.

இதனுடன் பெய்து வரும் மழையால் பொலன்னறுவை – பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டமும் அதிகரித்திருப்பதால் அதன் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.