தென்ஆப்ரிக்காவில் பயணிகள் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு…

தென்ஆப்ரிக்கா நாட்டில் பயணிகள் ரயில் லொரியுடன் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்துளளதாகவும் 180-க்கு மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்ஆப்ரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் இருந்து ஜோகன்னஸ்பர்க் நகருக்கு பயணிகள் ரயில் நேற்று(04) சென்றுக் கொண்டிருந்த வேளையில், கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த பயணிகள் ரயில் அந்த லொரி மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில், ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதுடன் சிறிது நேரத்தில் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் 18 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்றும், 268 -க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.