இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பது குறித்து தனது நாடு கவனத்திற் கொள்ளுமென தென்கொரியாவின் மனிதவள அபிவிருத்தி சேவை தலைவர் போராசிரியர் பார்க் யங் பம் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் பார்க், நேற்று(28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விவசாயத்துறையில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கோட்டாவை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து ஜனாதிபதி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் தலதா அத்துகோரல, கொரிய குடியரசின் தூதுவர் வொன் சாம் சேன்ங் (Won-Sam Chang) மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் ராஜ் ஒபேசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.