தென்கொரியாவுக்கு பயணிக்க ஹாங்காங் எச்சரிக்கை

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள மெர்ஸ் என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் மத்தியகிழக்கு சுவாச பாதிப்பு நோயின் பரவல் காரணமாக ஹாங்காங் வாசிகள் யாரும் தென்கொரியாவுக்கு பயணிக்கக் கூடாது என்ற உச்சகட்ட பயண எச்சரிக்கையை ஹாங் காங் அரசு வெளியிட்டுள்ளது.

தேவையற்ற தென்கொரிய பயணங்கள் அனைத்தையும் தவிர்க்கும்படி அறிவுறுத்தும் இந்த எச்சரிக்கை, தென்கொரியாவுக்கு பயணிப்பது ஆபத்தை அதிகப்படுத்தும் என்று அதிகாரிகள் நம்புவதையும் குறிப்புணர்த்துகிறது.

இந்த சுவாச நோயின் பாதிப்பால் இதுவரை 7 பேர் இறந்துள்ளதாகவும், மொத்தம் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சியோலின் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. இந்த 95 பேரில் புதிதாக இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட எட்டுபேரும் அடங்குவர்.