சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு -20 போட்டிகளுக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் நேற்று(08) கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழாமிற்கு விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபாவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ள தினேஷ் சந்திமாலும் குறித்த குழாமில் பெயரிடப்பட்டுள்ளது.
இருபதுக்கு – 20 போட்டிகள் எதிர்வரும் 14ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கை குழாம் – ஏஞ்சலோ மேத்யோஸ் (தலைவர்), தசுன் ஷானக, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, உபுல் தரங்க, குசல் மென்டிஸ், திசர பெரேரா, ஷெஹான் ஜெயசூரிய, ஷெஹான் மதுஷங்க, லஹிறு குமார, தினேஷ் சந்திமால், ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகென், பினுறு பெர்னாண்டோ
R.Rishma